சனி, 19 மார்ச், 2016

கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?


               கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?
முன்னுரை


          மாலை நேரம் ஆகிவிட்டால் போதும், போர்ப்படைப் போல புறப்பட்டு வரும் கொசுப்படையும், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களும் தொடங்கிவிடுகின்றன.
ஒரு கடியில்
         கொசுக்கள் நம்முடைய ரத்தத்தை உறிஞ்ச, ரம்ப வடிவத் தூவிகள் கொண்ட உறிஞ்சுகுழலைத் தோலுக்குள் செலுத்துகின்றன. இந்த தூவிகள் லேசான வலியைத் தரலாம். ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து போய்விடாமல் இருக்க, நொதிகள் கொண்ட எச்சில் போன்ற பொருளைச் சுரக்கின்றன. இந்த எச்சில் ஏற்படுத்தும் அலர்ஜியால் தான் கொசு கடித்த இடத்தில் சிலருக்கு தடிப்பு ஏற்படுகிறது. ஒரு கொசு ஒரு கடியில் 3 மில்லிகிராம் ரத்தத்தைக் குடிக்கும். ஆனால், ஒரு கொசுவின் சராசரி எடையே 2.5 கிரான்தான்.
எப்படிக் கண்டுபிடிக்கின்றன?
          மனிதர்கள் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு, வியர்வையில் உள்ள நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள், உடல் சூடு ஆகியவற்றை வைத்துக் கொசுக்கள் நம்மை நெருங்குகின்றன. இந்த அம்சங்கள் யாரிடம் அதிகம் இருக்கின்றனவோ, அவர்களைக் கொசு கடிக்க வாய்ப்பு அதிகம். அத்துடன் ‘ஓ’ ரத்த வகையைச் சேர்ந்தவர்களைக் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு காரணம் அந்த ரத்த வகையைக் கொண்டவர்களின் ரத்தத்தில் உள்ள புரதம்தானாம். கொசுக்கள் முட்டையிடுவதற்குப் புரதம் அவசியம்.
ரத்தப்பிரிவு
        இப்படியாகப் பெண் கொசுக்களுக்கு மனித ரத்தமே முதன்மை உணவாக இருக்கிறது. மனிதர்களிடையே பல்வேறு ரத்தப் பிரிவுகள் உண்டு. மனிதர்களில் ஒருவருடைய ரத்தத்தை வேறொரு ரத்தப் பிரிவைக் கொண்டவருக்குச் செலுத்தினால், உடல் ஏற்றுக் கொள்வதில்லை (ஓ பாசிட்டிவ் வகையைத் தவிர). அதே நேரம் வெவ்வேறு ரத்தப் பிரிவுகளைக் குடிக்கும் கொசுக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதா?

கொசுரத்தம்
          மனிதர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் மேற்புறத்தில் ஒரு வகையான புரதம் இருக்கிறது. இந்தப் புரதம் இருந்தால் அது பாசிட்டிவ் ரத்தம், இல்லையென்றால் அது நெகட்டிவ் வகை ரத்தம். அதே நேரம் நமது ரத்தத்தைக் குடித்து வாழும் கொசுக்களுக்கு எந்த ரத்தப் பிரிவும் கிடையாது. அதிகம் வளர்பானேன், கொசுக்களுக்கு ரத்தமே கிடையாது.
ரத்தத்திரவம்

         கொசுக்களுக்கு உடல் திரவங்கள் உண்டு, ஆனால் அது ரத்தமில்லை. ஹீமோலிம்ப் என்ற ரத்தத்தைப் போன்ற திரவம், அதன் உடலில் ஓடுகிறது. இது மனித ரத்தத்தைப் போன்றது அல்ல. அதில் ரத்தச் சிவப்பணுக்கள் கிடையாது. சிவப்பணுக்கள் தானே ரத்த வகைகளை பாசிட்டிவ், நெகட்டிவ்  என்பதை நிர்ணயிக்கன்றன. எனவே, கொசுக்களுக்கு ரத்தமோ, ரத்த வகைகளோ கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக