மூவிடம்
இடம் மூன்று வகைப்படும். அவை
தன்மை
முன்னிலை
படர்க்கை
தன்மை
தன்னைப் பற்றி
கூறும் சொல் தன்மை இடமாகும்.
எடுத்துக்காட்டு-
நான் எழுதினேன், நாங்கள் எழுதினோம், நான் செய்தேன்
முன்னிலை
நமக்கு முன்னால்
இருப்பவரைக் குறிப்பது முன்னிலை இடமாகும்.
எடுத்துக்காட்டு-
நீ கேட்டாயா?, நீங்கள் கேட்டீர்களா?
படர்க்கை
தன்னையோ, முன்னால்
நிற்பவரையோ குறிக்காமல் வேறு ஒரு மூன்றாவது நபரைக் குறிப்பது படர்க்கை இடமாகும்.
படர்க்கை உயர்திணை
அஃறிணை என்று இரு வகைப்படும்.
எடுத்துக்காட்டு-
அவன், அவள், அவர்கள் – படர்க்கை உயர்திணை
அவை, அது – படர்க்கை அஃறிணை
super
பதிலளிநீக்கு