வியாழன், 25 பிப்ரவரி, 2016

கூட்டுசராசரி;

கூட்டுசராசரி;
கண்டறிந்த மதிப்புகளின் கூட்டுத் தொகைக்கும், மதிப்புகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைக் கூட்டுச் சராசரி என்கிறோம்.
நேரடி முறையில் கூட்டுசாராசரி;
X    5  10 15 20 25 30
F    4  5  7  4  3  2
x        f            fx
5        4           20
10       5           50
15       7          105     
20       4           80
25       3          75
30       2          60
       N= 25         = 390

கூட்டுசராசரி    = 390\ 25
கூட்டுசராசரி    = 15.6
இதே போல் இந்த மதிப்புக்கு கூட்டுச் சராசரி கண்டுபிடியுங்கள்.
x  15 25 35 45 55 65 75 85
f   12 20 15 14 16 11 7 8

முயற்சி செய்யுங்கள் இதற்கான விடையை நாளை பார்க்கலாம்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

புள்ளியியல் ஒரு அறிமுகம்

                         புள்ளியியல்

வரையறை;

      புள்ளியியல் என்பது புள்ளி விவரங்களைச் சேகரித்தல், அளித்தல், ஆய்வுசெய்தல், எண் விவரங்களிலிருந்து கருத்துக்களை பல வகைகளில் தருவித்தல் என வரையறுக்கப்படுகிறது.

இளங்கலையில் புள்ளியியல்;
      
      இளங்கலை தமிழ், ஆங்கிலம் போன்றே இளங்கலை புள்ளியியல் என்று தனி பிரிவு உள்ளது. மற்ற பிரிவுகளைப் போல் இதிலும் இளங்கலை முதல் முதுகலை வரை பல பகுதிகள் உள்ளன. நமக்கு தெரிந்தது எல்லாம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியலில் சில பிரிவுகள். ஆனால் நமக்கு தெரியாமல் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள பிரிவுகள் பல. அவற்றுள் ஒன்று தான் புள்ளியியல் துறை. நாம் அனைவரும் எந்த பிரிவில் அதிக போர் உள்ளார்களோ அது தான் மதிப்புடையது என்று அந்த பாடத்தையே தேர்வு செய்வோம். ஆனால் அதைவிட மதிப்புடைய வேலைவாய்ப்பு மிகுந்த துறைகள் பல உள்ளன. 
அவற்றில் ஒன்று தான் புள்ளியியல்.

வேலைவாய்ப்புகள் பல;

         எஸ்.எஸ்.சி
         டி.என்.பி.சி
         என்.எஸ்.எஸ்.ஓ
         யூ.பி.எஸ்.சி
         ஐ.எஸ்.எஸ்
         ஐ.டி துறை
         விவசாயம்
         கல்லூரி பணி
         மக்கள் தொகை கணக்கெடுப்பு
  
     இவ்வாறு பல இடங்களில் இதற்கான  பணி இடங்கள் காலியாக உள்ளன. இதை புரிந்து கொள்ளாமல் வேலை இல்லை என புலம்பி கொண்டிருக்கிறோம்.


முதல் இயற்கை வேளாண் மாநிலம்


              முதல் இயற்கை வேளாண் மாநிலம்
முன்னுரை;    
 தலைப்பே வித்தியாசமாக உள்ளது என்று நினைக்கலாம். இன்று நாம் செயற்கையையே அதிகம் விரும்புகிறோம். இதனால் நமக்கு தீங்கு விளைகிறது.இதை உணர்ந்து கொண்ட ஒரு மாநிலம் செய்த அதிரடி முயற்சி தான் இயற்கை வேளாண்மை.இந்தியா விவசாய நாடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். விவசாய முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு மாநிலமே அதன்முழுவிவசாயத்தையும் இயற்கை முறைக்கு திருப்பி இருக்கிறதுஅந்த மாநிலத்தின் பெயர்சிக்கிம்.
விவசாயத்தின் மகிமை;
இந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங் விவசாயக் குடும்பத்தில் இருந்துவந்தவர்என்னதான் அரசியலில் அவர் ஜாம்பவனாக இருந்தாலும்ஐந்து முறைதொடர்ச்சியாக மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்திருந்தாலும்அவர் மனதின் ஓரத்தில்விவசாயம் என்ற உன்னதம் உறங்காமல் விழிப்போடு இருந்து கொண்டே இருந்தது.விவசாயத்தை விஷமாக மாற்றும் இன்றைய நவீன விவசாயத்தில் இருந்து மாற்றுவிவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கண்டார்அந்த விவசாயம் இயற்கைமுறையில் தான் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்அவர் தனது விருப்பத்தை 2003-ம்ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆர்கானிக் மாநிலம்;மேலும் சிக்கிம் இனி ஒரு ஆர்கானிக் மாநிலம்” என்றார். அதன்படி மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுவோர்க்கு ஒரு லட்சம் அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டன. “ஆர்கானிக் ஸ்டேட் போர்டு”  என்ற வாரியம் உருவாக்கப்பட்டது. இதையெடுத்து முதலில் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டி இருந்தது. அதற்காக தொடர்ந்து ஒரு பக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை தந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.
  இயற்கை உரம் தயாரிப்பு; அத்தனை நிலங்களையும் இயற்கை உரங்கள் தேவை. அந்த அளவிற்கு மாநிலத்தில் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனை சரி செய்வதற்கு, மாநிலம் முழுவதும் 24536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களையும், 1447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களையும் அரசு உருவாக்கியது. இயற்கை உரங்களை தயாரிக்க தாராளமாக மானியங்களை மாநில அரசு தந்தது. இயற்கை உரம் தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் சொல்லிக் கொடுத்தது. அதோடு நின்றுவிடவில்லை, “சிக்கிம் ஆர்கானிக் மிஷன்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. அந்த கிராமங்களில் எல்லாம் இயற்கை வேளாண்மை முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன.உயிர் கிராமங்கள்;
இந்த கிராமங்களை  “உயிர் கிராமங்கள்” என்று அழைத்தார்கள். இவ்வாறான தொடர் அதிரடி நடவடிக்கையால் 2009-ம் ஆண்டு இறுதியில் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறின. அப்போது மற்றொரு அறிவிப்பையும் பவன்குமார் வெளியிட்டார். இனி சிக்கிம் மாநிலத்துக்கு ரசாயன உரக் கோட்ட வேண்டாம். அதற்கான மத்திய அரசின் மானியமும் வேண்டாம் என்றார். மாநிலத்தில் ரசாயன உரத்துக்கான அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எப்படிப்பட்ட உன்னத திட்டங்களும் அதனை தொடர்வதற்கான ஆராய்ச்சிகளும், ஆய்வு முறைகளும் இல்லாததால் பலன் தாராமல் தோல்வி அடைந்துவிடுகிறது. இதை கச்சிதமாக புரிந்து கொண்ட சிக்கிம் அரசு “சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் பார் ஆர்கானிக் பார்மிங்” ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியது.தீர்க்கப்பட்ட சிக்கல்கள்;அதன் மூலம் சிக்கல்கள் அவ்வப்போது தீர்த்துவைக்கப்பட்டன. இத்தனையும் போர்கால அடிப்படையில் செய்ததால் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலம் நஞ்சில்லா விளைநிலங்கள் கொண்ட விவசாய பூமியாக மாறியது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்தாலும் நாட்கள் செல்ல செல்ல சிக்கிம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை புரிந்து கொண்டார்கள். இன்றைக்கு சிக்கிமில் விளைவிக்கப்படும் விளை பொருட்களை வாங்க உலக நாடுகள் தவம் கிடக்கின்றன. இவ்வாறக, சிக்கிம் மாநிலம், நாட்டின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.முடிவுரை;உலக நாடுகள் சிக்கிமை திரும்பி பார்க்க முக்கிய காரணமாக அமைந்தது இயற்கை விவசாயம் தான். ஆனால் இயற்கை விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட நாமோ நவின விவசாயத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இயற்கை விவசாயத்திற்கு எப்போது நாம் திரும்புகிறோமோ அந்த நாள் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் நம் நாடும் மாறும் என்பது உறுதி.

               முதல் இயற்கை வேளாண் மாநிலம்
முன்னுரை;
    

 தலைப்பே வித்தியாசமாக உள்ளது என்று நினைக்கலாம். இன்று நாம் செயற்கையையே அதிகம் விரும்புகிறோம். இதனால் நமக்கு தீங்கு விளைகிறது.இதை உணர்ந்து கொண்ட ஒரு மாநிலம் செய்த அதிரடி முயற்சி தான் இயற்கை வேளாண்மை.இந்தியா விவசாய நாடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். விவசாய முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒரு மாநிலமே அதன்முழுவிவசாயத்தையும் இயற்கை முறைக்கு திருப்பி இருக்கிறதுஅந்த மாநிலத்தின் பெயர்சிக்கிம்.
விவசாயத்தின் மகிமை;
இந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங் விவசாயக் குடும்பத்தில் இருந்துவந்தவர்என்னதான் அரசியலில் அவர் ஜாம்பவனாக இருந்தாலும்ஐந்து முறைதொடர்ச்சியாக மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்திருந்தாலும்அவர் மனதின் ஓரத்தில்விவசாயம் என்ற உன்னதம் உறங்காமல் விழிப்போடு இருந்து கொண்டே இருந்தது.விவசாயத்தை விஷமாக மாற்றும் இன்றைய நவீன விவசாயத்தில் இருந்து மாற்றுவிவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கண்டார்அந்த விவசாயம் இயற்கைமுறையில் தான் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்அவர் தனது விருப்பத்தை 2003-ம்ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆர்கானிக் மாநிலம்;
மேலும் சிக்கிம் இனி ஒரு ஆர்கானிக் மாநிலம்” என்றார். அதன்படி மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுவோர்க்கு ஒரு லட்சம் அபராதம், மூன்றாண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டன. “ஆர்கானிக் ஸ்டேட் போர்டு”  என்ற வாரியம் உருவாக்கப்பட்டது. இதையெடுத்து முதலில் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டி இருந்தது. அதற்காக தொடர்ந்து ஒரு பக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை தந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது.
  
இயற்கை உரம் தயாரிப்பு;
 அத்தனை நிலங்களையும் இயற்கை உரங்கள் தேவை. அந்த அளவிற்கு மாநிலத்தில் இயற்கை உரங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனை சரி செய்வதற்கு, மாநிலம் முழுவதும் 24536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களையும், 1447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களையும் அரசு உருவாக்கியது. இயற்கை உரங்களை தயாரிக்க தாராளமாக மானியங்களை மாநில அரசு தந்தது. இயற்கை உரம் தயாரிக்கும் முறையை விவசாயிகளுக்கு பயிற்சி மூலம் சொல்லிக் கொடுத்தது. அதோடு நின்றுவிடவில்லை, “சிக்கிம் ஆர்கானிக் மிஷன்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் பல கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. அந்த கிராமங்களில் எல்லாம் இயற்கை வேளாண்மை முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன.
உயிர் கிராமங்கள்;

இந்த கிராமங்களை  “உயிர் கிராமங்கள்” என்று அழைத்தார்கள். இவ்வாறான தொடர் அதிரடி நடவடிக்கையால் 2009-ம் ஆண்டு இறுதியில் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறின. அப்போது மற்றொரு அறிவிப்பையும் பவன்குமார் வெளியிட்டார். இனி சிக்கிம் மாநிலத்துக்கு ரசாயன உரக் கோட்ட வேண்டாம். அதற்கான மத்திய அரசின் மானியமும் வேண்டாம் என்றார். மாநிலத்தில் ரசாயன உரத்துக்கான அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எப்படிப்பட்ட உன்னத திட்டங்களும் அதனை தொடர்வதற்கான ஆராய்ச்சிகளும், ஆய்வு முறைகளும் இல்லாததால் பலன் தாராமல் தோல்வி அடைந்துவிடுகிறது. இதை கச்சிதமாக புரிந்து கொண்ட சிக்கிம் அரசு “சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் பார் ஆர்கானிக் பார்மிங்” ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியது.
தீர்க்கப்பட்ட சிக்கல்கள்;
அதன் மூலம் சிக்கல்கள் அவ்வப்போது தீர்த்துவைக்கப்பட்டன. இத்தனையும் போர்கால அடிப்படையில் செய்ததால் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலம் நஞ்சில்லா விளைநிலங்கள் கொண்ட விவசாய பூமியாக மாறியது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்தாலும் நாட்கள் செல்ல செல்ல சிக்கிம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையின் மகத்துவத்தை புரிந்து கொண்டார்கள். இன்றைக்கு சிக்கிமில் விளைவிக்கப்படும் விளை பொருட்களை வாங்க உலக நாடுகள் தவம் கிடக்கின்றன. இவ்வாறக, சிக்கிம் மாநிலம், நாட்டின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
முடிவுரை;
உலக நாடுகள் சிக்கிமை திரும்பி பார்க்க முக்கிய காரணமாக அமைந்தது இயற்கை விவசாயம் தான். ஆனால் இயற்கை விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட நாமோ நவின விவசாயத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இயற்கை விவசாயத்திற்கு எப்போது நாம் திரும்புகிறோமோ அந்த நாள் உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் நம் நாடும் மாறும் என்பது உறுதி.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்

உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்



 உலகம் முழுவதும்  ஜிகா வைரஸ் என்ற புதிய கிருமி பரவி வருகிறது. இதுவும் டெங்கு காய்ச்சல் போலவே, ஏடிஸ் வகை கொசுக்களால் ஏற்படும். இதற்கு தடுப்பூசி கிடையாது. இதுவரை யாரும் குணமானது இல்லை.  

ஜிகா வைரஸ்

      ஒருபுறம் விஞ்ஞானம் வளர வளர மறுபுறம் புதிய புதிய நோய்க்கிருமிகள் உருவாகி வருகின்றன. டெங்கு, சிக்கன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.       அந்த கிருமியின் பெயர் ஜிகா வைரஸ்   1947 – ம்  ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிரலும், டான்சியாவிலும் மனிதர்களையும் தாக்கியது.    சமீபகாலத்தில் , 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் , பசுபிக் நாடுகளில்  ஜிகா வைரஸ்  தாக்கியது.  அதையடுத்து, கடந்த  ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூளை பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள்

        பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3 ஆயிரத்து 500 குழந்தைகள் இதுபோன்று பிறந்திருப்பதால், இதற்கும் ஜிகா வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடக்க காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஜிகா வைரஸ் தாக்குதல் இருந்ததால், மூளை பாதிப்புக்கும் அதற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழவில்லை. சமீபகாலமாகவே, இந்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், கர்ப்பிணி பெண்களின் தொப்புளை தாக்கும் ஜிகா வைரஸ், அதன் வழியாக, கருவில் இருக்கும் சிசுவின் மூளைக்கு செல்லக்கூடியது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

       ஜிகா வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக  சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது.   இந்தியாவில், இக்கிருமி தாக்கியதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. அதனால் மத்திய அரசு எந்த உஷார் நடவடிக்கையும் பிறப்பிக்கவில்லை.
ஏடிஸ் கொசுக்கள்

 டெங்கு, சிக்கன்குனியாவைப் போன்று    ஜிகா  கிருமியும், ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. இந்த வகையான கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். பாத்திரம், டயர் போன்றவற்றில் தேங்கி உள்ள நன்னீரில், இக்கொசுக்கள் முட்டையிடும். ஆகவே, பாத்திரங்களை மூடி வைக்குமாறும், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அறிகுறிகள்
  ஜிகா வைரஸ் தாக்கினால், டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகளே காணப்படும். அதாவது, ஒரு வாரத்துக்கு கடுமையான காயச்சல் நீடிக்கும். தோலில் கொப்புளம் ஏற்படும். கண்கள் சிவந்து விடும்ழ மூட்டு வலி, உடல் அசதி, தலைவலி ஏற்படும்.

கல்லாதவனுக்கு உபதேசிப்பதும் தீங்கே



                      பழமொழி

                            முன்றுறையரையனார்

கல்லா   தவரிடைக்   கட்டுரையின்  மிக்கதோர்

பொல்லாத   தில்லை   ஒருவற்குநல்லாய்!

இழுக்கத்தின்   மிக்க   இழிவில்லை;   இல்லை,

ஒழுக்கத்தின்   மிக்க   உயர்வு. (பாடல் எண் - 57)

ஒழுக்கத்தின் மிக்க உயர்வு என்பது பழமொழி. ஒழுக்கத்தின் சிறப்பினால் வரும் உயர்வைவிட சிறந்த உயர்வு ஒருவர்க்கு எதுவுமில்லை. இழுக்கத்தை விட மிகவும் இழிவானது ஒன்றுமில்லை. ஒழுக்கத்தை விட மிகவும் உயர்வானது இவ்வுலகில் எதுவுமில்லை. ஆதலால் கல்லாதவர் முன்பு கட்டுரையைப் படித்துக் காட்டுவதைப் போல ஒரு இழிவான செயல் இவ்வுலகில் வேறொன்றுமில்லை.

சனி, 30 ஜனவரி, 2016

பழமொழி




                        

                              
                                         -முன்றுறையரையனார்

இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 400 வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி ஒன்றைப் பெற்று வருவதால் இந்நூல் “பழமொழி” எனப் பெயர் பெற்றது. 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லைஅந்நாடு;

வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவ தில்.

ஆற்றுணா வேண்டுவது இல் என்பது பழமொழி.
ஆற்றுணா – கட்டுச்சோறு. இல் – தேவையில்லை.
கற்க வேண்டிய நூல்களை தேர்ந்ததெடுத்து கற்று அறிந்தவர்களே அறிவுடையவர்கள் ஆவார்கள். அத்தகைய அறிவுடையவர்கள் நான்கு திசைகளிலும் செல்லாத நாடில்லை. அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடாக இராது. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச்சோறு கொண்டுபோக வேண்டியது இல்லை. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படும்.

வெள்ளி, 22 ஜனவரி, 2016

திருக்குறள் பலூன்



 திருக்குறள் பலூன்

சிறியவர் முதல் பெரியவர் வரை பலூன் என்றால் அனைவருக்கும் விருப்பம்தான். பல வண்ணங்களில் பல வடிவங்களில் இருக்கும் இது அனைவரையும் கவர்கிறது. குறள் பலூன் என்றால் என்னவாக இருக்கும்? பலூனில் ஒரு குறள் எழுதியிருப்பார்களா? என்று நாம் நினைக்கலாம். அதுதான் இல்லை. சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூனில் வள்ளுவர் எழுதிய 1330 குறளும்  தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடனும் வள்ளுவரின் படத்துடன் இடம் பெறும்.

உருவான வீதம்

  A.R. செல்வ சரவணா மற்றும் பெனெடிக் இருவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் இந்த குறள் பலூன். இவர்கள் அழகிய பலூன்களை வடிவமைப்பதில் வல்லவர்கள். இவர்களின் வித்தியாசமான முயற்சி தான் இந்த குறள் பலூன். இந்த பலூனை கூடிய விரைவில் உலகெங்கும் பறக்க விட உள்ளனர். மிகப்பெரிய வெப்ப காற்று பலூனில் நம் புகைப்படமும பயணம் செய்ய முடியும் என்றால் அந்த சந்தோசத்தை விவரிக்க முடியாது. அதற்காக நாம் செய்ய வேண்டியது 7500 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் அடிப்படை நோக்கம் திருக்குறளை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே.
திருக்குறளின் சிறப்பு
 ஏன் ஒரு தமிழ் நூலை உலகறியச் செய்ய வேண்டும்? என நினைக்கலாம். இந்த உலகிற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களையும் இரண்டடியில் கூறிய வள்ளுவரின் திறமே இதற்கு காரணம். வேறு எந்த மொழியிலும் இத்தனை சிறப்புடைய நூல் இல்லை. எக்காலத்திற்கும் பொருந்தாத திருக்குறள் முக்காலத்தையும் உணரத்துவதாக உள்ளது.

திருக்குறளை படிக்க அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க வேண்டும் - காந்தி

தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நம்மால் திருக்குறளின் சுவையை உணர முடியாது. இதுவே திருக்குறளின் தனித்தன்மை ஆகும். உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டை திரும்பிப் பார்க்கும் விதமாக இந்த குறள் பலூன் பயணம் இருக்கும் என நம்பப்படுகிறது.