சனி, 26 மார்ச், 2016

சுற்றுச்சூழலின் வரலாறு



                        சுற்றுச்சூழலின் வரலாறு
முன்னுரை
இன்றைக்கு எல்லோருமே சுற்றுச்சூழல் சீர்க்கேட்டை பற்றி பரவலாக பேசுகிறோம். சமீபத்தில் தான் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.  ஒரு புறம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டாலும் மறுபுறம் அதை மாசுபடுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு
ஆனால் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டின் வரலாறு கிறிஸ்துப் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டார்கள் ரோமானியர்கள் தான். அவர்கள் தான் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டுக்கும், பிள்ளையார் சுழிப்போட்டனர். ஆனால் அது விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல் என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள். கி.மு.400க்குப் பின் நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் அந்த மதுவில் காரியம் கலந்த ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல், மனநிலை பாதிப்புக்கும் காரணமாகிறது. இந்த மது உடலுக்குள் சென்று எலும்புகளை பெரிதாக பாதித்து இருக்கிறது. ரோமபேரரசர்களின் எலும்புக்கூடுகள் மிக அதிக அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயிர்த்தியாகம்
கி.மு.வில் ரோமபேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால், கி.பியில் நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்து இருக்கிறது. 1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில், மன்னர் அஜய்ஜிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மார்வார் என்ற வனப் பகுதியில் புதிதாக அரண்மனையை அமைக்க நினைத்தார். அரண்மனை அமைக்க வேண்டும் என்றால் அங்குள்ள மரங்களை வெட்டியாக வேண்டும்.அந்த வேலையை செய்ய  மன்னர் தன் வீரர்களை அனுப்பி வைத்தார்.அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பிஷ்ணோய் என்ற இனமக்கள், இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். அவர்கள் மரங்களை வெட்ட வந்த வீரர்களை பார்த்ததும் பதறிப்போய் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துப் போனது. வேறு வழியில்லாமல் ஒவ்வோரு பிஷ்ணோய் இனத்தவரும் ஒரு மரத்தை கட்டிபிடித்தவர்களை வெட்டி போட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது.
சிப்கோ இயக்கம்
363 மரங்களையும் கட்டிப்பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய மன்னனின் மனம் இலேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று திரும்பி வர கட்டளை இட்டான்.  பிஷ்ணோய் இன மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுக்காப்புகான முதல் போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான், இந்த நிகழ்வை சிப்கோ இயக்கம் என்று கொண்டாடுகிறார்கள். ஒரு பிரச்சனையைப் பற்றி எதாவது புத்தகம் வந்தால்தான், அந்த நிகழ்வு உண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அர்த்தம். சுற்றுச்சூழல் குறித்து முதல் விழிப்புணர்வு புத்தகம் 1864-ல் அமெரிக்க தத்துவ சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதினரார். மேன் அன்ட் நேச்சர்என்ற இந்த  புத்தகம் தான் சுற்றுச்சூழலின் அவசியத்தையும், அதன் பாதிப்பையும் முதன் முதலாக சொன்னது.
முடிவுரை
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை நன்கு உணரந்த நம் முன்னோர்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் நாமோ அதை புரிந்து கொள்ளாமல்  சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொண்டே போகின்றோம். இதனால் ஏற்படும் விளைவுகளை நன்கு உணர்ந்தும் நாம் அமைதியாக இருக்கின்றோம். தனிமனிதன் மாறினால் சமுதாயம் மாறும் என்று கூறுவர். எனவே நாம் மற்றவர்களை குறை கூறாமல் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைப்போம். சுற்றுச்சூழலைப் பாதுக்காப்போம்.

வெள்ளி, 25 மார்ச், 2016

நிறங்கள் மூலம் சிகிச்சை



              நிறங்கள் மூலம் சிகிச்சை
முன்னுரை

 
தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நோய்க்கு சிகிச்சை என்றால் நமக்கு தெரிந்தது ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று பல முறைகள் உள்ளன. ஆனால் நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு கிரோமோதெரபி என்று பெயர்.
கிரோமோதெரபி
இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை. ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு.
நம் முன்னோரின் சிறப்பு
 இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது. 2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள்,  ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தைப் பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

உறுப்புகளை காக்கும் நிறங்கள்
1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர். சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், நீல நிறம் தொண்டைப்பகுதியையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், இண்டிகா நிறம் சருமத்தையும், ஊதா நிறம் தலைப்பகுதியையும் காப்பதாக இந்த மருத்தவமுறை சொல்கிறது. டிஸ்லெக்சியா  போன்ற கற்றல் குறையாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள்.
முடிவுரை
ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள்.  இதனை  அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இரண்டும் ஒன்றல்ல!




                        இரண்டும் ஒன்றல்ல!


       சட்ட மன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ மறைந்தால் அந்த தொகுதியில் நடத்தப்படுவது இடைத்தேர்தல் (பைஎலக்சன்), சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ குறிப்பிட்ட காலத்துக்கு முன் கலைக்கப்படுவதால் வருவது இடைக்கால தேர்தல் (மிட்டர்ம் எலக்சன்)
       
       நைஜூரீயா நாட்டினர்  Nigerian என்றும், நஜைர் நாட்டினர் Nigerien என்றும் குறிப்பிடுகிறார்கள்.
     
      பொலிவியானோ என்பது பொலிவியா நாட்டு நாணயம். பொலிவர் என்பது வெனிசுலா நாட்டு நாணயம்.
      
      ஒரு நாளில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றங்களை weather என்றும், பல மாதங்கள் நிலவும் தட்ப வெப்ப நிலையை climate என்றும் குறிப்பிடுகிறோம்.
     
      இந்திய அரசின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார்.
அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ராநாட் என்றும், ரஷிய விண்வெளி வீரர் காஸ்மோநாட் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
     
      காமன்வெல்த் நாடு ஒன்றுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி
ஹை கமிஷனர் என்றும், காமன்வெல்த் நாடல்லாத பிற வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி அம்பாசிடர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

சனி, 19 மார்ச், 2016

கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?


               கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?
முன்னுரை


          மாலை நேரம் ஆகிவிட்டால் போதும், போர்ப்படைப் போல புறப்பட்டு வரும் கொசுப்படையும், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களும் தொடங்கிவிடுகின்றன.
ஒரு கடியில்
         கொசுக்கள் நம்முடைய ரத்தத்தை உறிஞ்ச, ரம்ப வடிவத் தூவிகள் கொண்ட உறிஞ்சுகுழலைத் தோலுக்குள் செலுத்துகின்றன. இந்த தூவிகள் லேசான வலியைத் தரலாம். ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து போய்விடாமல் இருக்க, நொதிகள் கொண்ட எச்சில் போன்ற பொருளைச் சுரக்கின்றன. இந்த எச்சில் ஏற்படுத்தும் அலர்ஜியால் தான் கொசு கடித்த இடத்தில் சிலருக்கு தடிப்பு ஏற்படுகிறது. ஒரு கொசு ஒரு கடியில் 3 மில்லிகிராம் ரத்தத்தைக் குடிக்கும். ஆனால், ஒரு கொசுவின் சராசரி எடையே 2.5 கிரான்தான்.
எப்படிக் கண்டுபிடிக்கின்றன?
          மனிதர்கள் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு, வியர்வையில் உள்ள நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள், உடல் சூடு ஆகியவற்றை வைத்துக் கொசுக்கள் நம்மை நெருங்குகின்றன. இந்த அம்சங்கள் யாரிடம் அதிகம் இருக்கின்றனவோ, அவர்களைக் கொசு கடிக்க வாய்ப்பு அதிகம். அத்துடன் ‘ஓ’ ரத்த வகையைச் சேர்ந்தவர்களைக் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு காரணம் அந்த ரத்த வகையைக் கொண்டவர்களின் ரத்தத்தில் உள்ள புரதம்தானாம். கொசுக்கள் முட்டையிடுவதற்குப் புரதம் அவசியம்.
ரத்தப்பிரிவு
        இப்படியாகப் பெண் கொசுக்களுக்கு மனித ரத்தமே முதன்மை உணவாக இருக்கிறது. மனிதர்களிடையே பல்வேறு ரத்தப் பிரிவுகள் உண்டு. மனிதர்களில் ஒருவருடைய ரத்தத்தை வேறொரு ரத்தப் பிரிவைக் கொண்டவருக்குச் செலுத்தினால், உடல் ஏற்றுக் கொள்வதில்லை (ஓ பாசிட்டிவ் வகையைத் தவிர). அதே நேரம் வெவ்வேறு ரத்தப் பிரிவுகளைக் குடிக்கும் கொசுக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதா?

கொசுரத்தம்
          மனிதர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் மேற்புறத்தில் ஒரு வகையான புரதம் இருக்கிறது. இந்தப் புரதம் இருந்தால் அது பாசிட்டிவ் ரத்தம், இல்லையென்றால் அது நெகட்டிவ் வகை ரத்தம். அதே நேரம் நமது ரத்தத்தைக் குடித்து வாழும் கொசுக்களுக்கு எந்த ரத்தப் பிரிவும் கிடையாது. அதிகம் வளர்பானேன், கொசுக்களுக்கு ரத்தமே கிடையாது.
ரத்தத்திரவம்

         கொசுக்களுக்கு உடல் திரவங்கள் உண்டு, ஆனால் அது ரத்தமில்லை. ஹீமோலிம்ப் என்ற ரத்தத்தைப் போன்ற திரவம், அதன் உடலில் ஓடுகிறது. இது மனித ரத்தத்தைப் போன்றது அல்ல. அதில் ரத்தச் சிவப்பணுக்கள் கிடையாது. சிவப்பணுக்கள் தானே ரத்த வகைகளை பாசிட்டிவ், நெகட்டிவ்  என்பதை நிர்ணயிக்கன்றன. எனவே, கொசுக்களுக்கு ரத்தமோ, ரத்த வகைகளோ கிடையாது.

ஞாயிறு, 6 மார்ச், 2016

பிளாஷ் பேக் எனும் புரட்சி

                       பிளாஷ் பேக் எனும் புரட்சி
முன்னுரை
ஒரு திரைப்படம் என்றால் நாம் எதிர்ப்பார்ப்பது பலவாக இருக்கும். நகைச்சுவை, காதல், சண்டை, சோகம், பாடல் என சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய சினிமாவில் எதற்கெடுத்தாலும் ஒரு பிளாஷ் பேக்கை காட்டிவிடுகிறார்கள். இதில் பெரிதாக இருக்கும் படத்தை சுருக்கிச் சொல்லி சிறியதாக்கிவிடுகிறார்கள்.
கண்டுபிடிக்கப்படாத காலம்
 ஆனால் இந்த பிளாஷ் பேக் உத்தி கண்டுபிடிக்காத காலங்களில் சினிமா என்பது ஒரு போரடிப்பதாக இருந்தது. ஒரு கதையை சொல்ல வேண்டும் என்றால் அதன் தொடக்கத்தில் இருந்து  வரிசைப்படி தான் சொல்ல வேண்டும். எடிட்டிங் என்ற தொழில்நுட்பமும் அப்போது இல்லை. அதனால் காட்சிகளையும் கதையின் படியே எடுத்துச் செல்ல வேண்டும்ஒரு ஹீரோ கஷ்டப்பட்டு பெரிய பணக்காரனாக மாறுகிறான் என்றால், அவன் சிறுவனாக இருந்தது, பல வேலைகளைச் செய்ததது, வளர்ந்து பணம் சேர்த்தது, பணக்காரன் ஆனது என்று படிப்படியாகத்தான் காட்ட முடியும். இதனால் பார்ப்போர் சலித்துப்போனார்கள்.
பிளாஷ்பேக்
 ஆனால், இப்போது எடுத்தவுடன் ஹீரோவைப் பெரிய பணக்காரனாக காட்டிவிட்டு, அதன்பின் சின்ன பிளாஷ்பேக்கில் அவன் கஷ்டப்படுவதையும் காட்டிவிடலாம். பிளாஷ்பேக் என்பதை சினிமாவின் புரட்சி என்கிறார்கள்.

முதல் பிளாஷ்பேக் சினிமா
இதை சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் அகிரா குரோசோவா என்ற இயக்குனர். அவர் இயக்கியரொஷோமான் படத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். படத்தில் ஒரு பெண் கொல்லப்படுகிறாள். அதில் சம்பந்தபட்ட நான்கு பேரை விசாரிக்கும் போது, ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் அந்த சம்பவத்தை விவரிப்பார்கள். நான்கு கோணங்களில் கதை நகரும். இறுதி வரை கொலையாளி யார் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கும். இது தான் அந்த படத்தின் கதை. திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் அகிரா குரோசோவா இயக்கிய மிகச்சிறந்த படம் இது.
அசையும் காட்சிகளுக்கு அடுத்த புரட்சி

இதன் மூலம் அவர் கொண்டு வந்த சிந்தனையான பிளாஷ்பேக் என்ற யுத்தி, லூமியர் சகோதரர்களால் கண்டுபிடித்த அசையும் காட்சிகளுக்கு அடுத்து, ஒரு பெரிய புரட்சியாக கருதப்பட்டது. இந்த கதையை அடிப்படையாக வைத்துதான் தமிழில் சிவாஜி கணேசன் நடித்த “அந்த நாள்” படம் வந்தது. திரைக்கதையில் சில விஷயங்களை மறைத்து, ரசிகர்களுக்கு படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த, பெரும்பாலான இயக்குனர்களுக்கு இன்று வரை பிளாஷ்பேக்தான் பயன்படுகிறது.

வெள்ளி, 4 மார்ச், 2016

தட்டைப்பாதங்கள் தரும் வேதனை

 தட்டைப்பாதங்கள் தரும் வேதனை


முன்னுரை


      பாதங்களில் என்ன வேதனை இருக்கப் போகிறது என நீங்கள்   நினைக்கலாம்  .அதிலும் கூட பல பிரச்சனைகள் இருக்கிறது.
மனிதனின் பாதங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதுஉடல் வலிமைஉள்ளவர்களை சேர்த்துக் கொள்ளும் ராணுவம் கூட 
தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தடி போடுகிறதுஏன்?

பிறந்த குழந்தைக்கு இருக்கும் தட்டைப்பாதம்

     பிறந்த குழந்தையின் பாதத்தை தொட்டுப்பாருங்கள்அதன்   வடிவம் தட்டையாகத்தான்  இருக்கும்குறைந்தபட்சம் 2 வயது வரை இந்த தட்டைப் பாதம்நீடிக்கும் வயதுக்குள் 95 சதவீதக்   குழந்தைகளுக்கு கீழ் பாதத்தின் நடுப்பகுதி உள்பக்கமாக வளையத் தொடங்கும்நம் அனைவரின் பாதங்களும் ஒரே மாதிரியான  அமைப்பில் இருப்பதில்லைபல வடிவங்களில்பல   அளவுகளில் காணப்படும்.சொல்லப்போனால் ஒருவரின் வலது   பாதத்துக்கும் இடது பாதத்துக்கும் இடையே கூடஓரளவு   வித்தியாசம் இருக்கிறது

நெகிழ்ந்து கொடுக்கும் தட்டைப்பாதம்

    சிலருக்கு நிற்கும் போது உடலின் எடை பாதத்தில் விழுவதால்   பாதம் சற்றுதட்டையாகத் தோன்றும்அவர்களே உட்கார்ந்தாலோபடுத்தாலோ பாதத்தின் நடுப்பகுதிசமத்தாக உட்புறம் வளைந்து   சாதரணமாக மாறிவிடும்இது நெகிழ்ந்து கொடுக்கும்தன்மையுள்ள தட்டைப் பாதம்பாதத்தின் இயல்பான வடிவத்தை காக்கும்   தசைநார்கள் தொய்ந்து போயிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.   தட்டையான பாதம்கொண்டவர்களுக்கு தினசரி வேலைகளில்   பிரச்சனை இருக்காதுஅவசரமாக ஓடிப்போய் ஏறிக் கொள்வதில்  கூட சிரமம் இருக்காதுஆனால்நீண்ட நேரம் நின்று கொண்ட வேலை பார்த்தால் பாதத்தில் குடைச்சல் ஏற்படும்தவிர   ஓட்டப்பந்தய வீரராக வருவதுகடினம்  இதனால்தான் ராணுவத்தில் இவர்களுக்கு வேலை தருவதில்லை

இறுகிய தட்டைப்பாதம்

      தட்டைப்பாதத்தில் எந்த வேதனையும் இல்லையென்றால் இது  குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லைஅதுபோலவே  லேசான வலி அவ்வப்போது ஏற்பட்டுசரியானலும் கவலைப்படத்  தேவையில்லைஆனால்மருத்துவர்களுக்கும்,நோயாளிகளுக்கும் சிக்கலைத் தரக்கூடிய தட்டைப்பாத வகையும் உண்டுஅதை  இறுகிய தட்டைப்பாதம் என்கிறார்கள்இவர்களுக்கு பின்  பாதத்துக்கும்நடுப்பாதத்துக்கும்இடையே உள்ள எலும்புகள்  பிறப்பிலேயே இணைந்து ஒருவித எலும்புப் பாலம் போல் ஆகிவிடும்அங்கு நெகிழ்வுத் தன்மைக் குறைந்து அதன்  காரணமாகவும் தட்டைப்பாதம்உண்டாகலாம்.

முடிவுரை

     தட்டைப் பாதம் கொண்டவர்களுக்கு அதிக வலி ஏற்பட்டால்  அதற்கென்று இருக்கும்காலணிகளை அணிந்து கொள்ளலாம்அதிலும் பயன் கிடைக்காவிட்டால் பாதத்தின்வெளிப்புறமும்உட்புறமும் அசைவைக் குறைக்கும் வகையில் சிகிச்சை செய்வதேநல்லதுஇதையும் 15 வயதுக்கு மேல் செய்வதே சிறந்ததுஅப்போதுதான் பாதம்முழுவளர்ச்சி அடைந்திருக்கும்.